ஆப்நகரம்

இந்திய ரசிகர்களின் இரைச்சல்தான் இம்சை: அம்பயர் எராஸ்மஸ் எரிச்சல்

ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் முடிவுகள் எடுப்பது கடினமாகிறது என்று அம்பயர் மராய்ஸ் எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்

TNN 14 May 2017, 8:21 pm
ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் முடிவுகள் எடுப்பது கடினமாகிறது என்று அம்பயர் மராய்ஸ் எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்
Samayam Tamil umpire marais erasmus finds decision making in ipl difficult due to noise
இந்திய ரசிகர்களின் இரைச்சல்தான் இம்சை: அம்பயர் எராஸ்மஸ் எரிச்சல்


ஐபிஎல் போட்டிகளில் ஆரம்பம் முதலே அம்பயராக பணியாற்றி வருபவர் மராய்ஸ் எராஸ்மஸ். ஐபிஎல் தொடர் பத்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் தனது ஐபிஎல் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகளில் உள்நாட்டு போட்டியாக இருந்தாலும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நான் முதலில் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்த வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். நல்ல வேளையாக அந்த முடிவை நான் சரியாகவே எடுத்தேன். அது எனக்கு மறக்க முடியாதது.” என்று கூறினார்.

ஆனால், இப்போது அம்பயர்கள் முடிவெடுப்பது தொழில்நுட்ப உதவியால் சற்று எளிமையாகிவிட்டது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் ஆரவாரம் இரைச்சலாக ஒலிப்பதால் முடிவுகளை எடுப்பது கடினமானதாக இருக்கிறது. இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை அந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது.” என்றும் எராஸ்மஸ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்