ஆப்நகரம்

‘பும்ரா, புவியை போல’…இனி நானும், இவரும் இருப்போம்: இளம் பௌலர் அதிரடி அறிவிப்பு…உண்மைதான்!

பும்ரா, புவனேஷ்வர் குமார் இருவரைப்போல இனி நானும், இந்த பௌலரும் இருப்போம் என இளம் பௌலர் அதிரடியாக பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 30 Nov 2022, 10:47 am
விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா இருவரும்தான் பந்துவீச்சு துறையை வழிநடத்தி வந்தார்கள்.
Samayam Tamil பும்ரா, புவனேஷ்வர் குமார்


புவனேஷ்வர் குமார் பவர் பிளேவில் அதிரடி காட்ட, பும்ரா டெத் ஓவர்களில் மாஸ் காட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு புவி, பும்ரா இருவரும் ஒன்றாக இணைந்து அவ்வளவாக பந்துவீசவில்லை. இனியும் இதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கருதப்படுகிறது. ஆம், புவனேஷ்வர் குமார் சமீப காலமாக படுமோசமாக சொதப்பி வருவதால், அவருக்கு மூன்றுவித அணியிலும் இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்.

மேலும் புவனேஷ்வர் குமாருக்கு 32 வயதாகிவிட்டதால், இனி இளம் பௌலரைத்தான் பிசிசிஐ களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில்தான் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு வருகை தந்துள்ளார். இதனால் இனி பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான் இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்துவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவுக்கு 28 வயதாவதால், அவர் இன்னும் 2-3 ஆண்டுகளில் வலுவை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், அர்ஷ்தீப் சிங்கிற்கு இணையாக, அவருடன் சேர்ந்து யார் பந்துவீச்சு துறையை வழிநடத்துவார்? என்ற கேள்வியும் இருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் பேட்டி:

இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அர்ஷ்தீப் சிங் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், ‘‘இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால், மட்டுமே இடத்தை தக்கவைக்க முடியும். இதனால், என்னுடைய ஒவ்வொரு போட்டியும் எனக்கு சவால் மிகுந்ததுதான். நானும், உம்ரான் மாலிக்கும் நீண்ட காலம் ஒன்றாக இணைந்து பந்துவீச அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர் 155 வேகத்தில் பந்துவீசுகிறார். இதனால், எனக்கு அவ்வளவாக அழுத்தங்கள் இருக்காது. இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட காலத்திற்கு தொடரும் என நம்புகிறேன்” எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்