ஆப்நகரம்

எப்பவுமே எங்க ‘மாஸ் ஹீரோ’ ‘தல’ தோனி தான்!

'எப்பவும் இந்திய கிரிக்கெட் அணியின் ‘மாஸ் ஹீரோ’ தான் என’ முன்னாள் கேப்டன் தோனியின் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.

TOI Sports 27 Sep 2017, 6:49 pm
பெங்களூரு: 'எப்பவும் இந்திய கிரிக்கெட் அணியின் ‘மாஸ் ஹீரோ’ தான் என’ முன்னாள் கேப்டன் தோனியின் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.
Samayam Tamil venue can change format can change but craze for msdhoni remain the same
எப்பவுமே எங்க ‘மாஸ் ஹீரோ’ ‘தல’ தோனி தான்!


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இவர் ஐசிசி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக் கோப்பை (50 ஓவர், டி-20, சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர்.

இவர் தன் மீது எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, கேப்டன் பொறுப்பை தூக்கி வீசினார். தற்போது விராட் கோலி தலைமையில் இந்திய அணியில் விளையாடி வருகிறார். கோலி கேப்டனாக இருந்த போதும், இன்னும் ரசிகர்கள் மனதில் தோனியே கேப்டனாக திகழ்ந்துவருகிறார்.

அதற்கு ஏற்ப கோலி எப்போது எல்லாம் நெருகடியில் சிக்குகிறாரோ அப்போது தோள் கொடுக்கும் தோழனாகவும், நல்ல தலைவனாகவும் ரசிகர்கள் மனதில் நங்கூரமாக நின்று வருகிறார் தோனி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி செல்லும் எல்லா இடங்களிலும், யார் சதம் அடித்தாலும், யார் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினாலும் சரி, ரசிகர்கள் தோனியின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

முதலில் சென்னை, கொல்கத்தா, இந்தூர் என தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நாளை கோலியின் கோட்டையாக பார்க்கப்படும் பெங்களூருவில் நடக்கவுள்ள போட்டியிலும் தோனிக்கு உற்சாக வரவேற்பு கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

VENUE CAN CHANGE FORMAT CAN CHANGE BUT CRAZE FOR MSDHONI REMAIN THE SAME!

அடுத்த செய்தி

டிரெண்டிங்