ஆப்நகரம்

இந்தியாவின் சிறப்பான பதிலடியால் மொத்தம் 900+ ரன்களை தாண்டியது

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து சிறப்பாக விளையாடி 900+ ரன்களை கடந்து விளையாடி வருகின்றது.

TOI Sports 19 Dec 2016, 12:21 pm
சென்னை : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து சிறப்பாக விளையாடி 900+ ரன்களை கடந்து விளையாடி வருகின்றது.
Samayam Tamil vijay perishes after karun ton
இந்தியாவின் சிறப்பான பதிலடியால் மொத்தம் 900+ ரன்களை தாண்டியது


இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தி நடைப்பெற்று வருகின்றது.
இங்கிலாந்து அணி சார்பில் மோயின் அலி 146 ரன்கள் குவிக்க, மற்ற இங்கிலாந்து வீரர்கள் ரூட் 88, பேரிஸ்டோ 49, டவ்சன் 66, ரசீத் 60 ரன்கள் எடுக்க 10 விக்கெட் இழப்பிற்கு 477 ரன்களை குவித்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக பதிலடி கொடுத்து வருகின்றது. இந்திய தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 199 ரன்கள் குவித்தார், அதே போல கரூண் நாயர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து (122*) விளையாடி வருகின்றார்.

போட்டியின் 4வது நாள் ஆட்ட முதல் உணவு இடைவேளையின் போது, கருண் நாயர் 122 ரன்கள் மற்றும் அஸ்வின் 9 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். காயத்தில் அவதிப்பட்ட முரளி விஜய் 5வது இடத்தில் களமிறங்கி 29 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

இங்கிலாந்து அணியின் 477 ரன்களை ஈடுகட்ட இந்திய அணிக்கு இன்னும் 14 ரன்கள் மட்டுமே தேவை. இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடி 940+ (477+463*) ரன்களை கடந்து விளையாடி வருகின்றது.

இன்று போட்டியின் 4வது நாள் என்பதால், இந்தியா இன்னும் முதல் இன்னிங்ஸ் கூட முடியாத நிலையில், இன்னும் ஒன்றரை நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போட்டி அதிகபட்சம் டிராவை நோக்கி செல்லும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்