ஆப்நகரம்

தென் ஆப்பிரிக்காவில் கோலியின் பர்ஸை காலி செய்யும் அனுஷ்கா!

அண்மையில் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் தென் ஆப்பிரிக்காவில் ஜாலியாக ஷாப்பிங் செய்தனர்.

TNN 1 Jan 2018, 2:26 am
அண்மையில் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் தென் ஆப்பிரிக்காவில் ஜாலியாக ஷாப்பிங் செய்தனர்.
Samayam Tamil virat kohli anushka sharma go shopping in cape town
தென் ஆப்பிரிக்காவில் கோலியின் பர்ஸை காலி செய்யும் அனுஷ்கா!


இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி கேப் டவுணில் நடக்கிறது.

இதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது இந்திய அணி. அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியையும் தென் ஆப்பிரிக்காவுக்கு உடன் அழைத்துச்சென்றுள்ளார். அவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்காவில் இரண்டாவது முறையாக மினி ஹனிமூன் விசிட்டில் உள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கடைகளில் ஜாலியாக ஷாப்பிங் செய்யும் புகைப்படத்தை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
Sale sale sale. #Virushka #ViratKohli shopping time with his wife #Anushka in Cape Town pic.twitter.com/7U27bDDPHA — Devendra Pandey (@pdevendra) December 31, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்