ஆப்நகரம்

தோனி சாதனையை தட்டிப் பறித்த கேப்டன் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி தன்வசப்படுத்தினார்.

TNN 18 Sep 2017, 4:26 pm
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி தன்வசப்படுத்தினார்.
Samayam Tamil virat kohli becomes surpass ms dhoni in terms of most consecutive wins as indian captain
தோனி சாதனையை தட்டிப் பறித்த கேப்டன் கோலி!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறையில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உட்பட 9 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்றதால், அடுத்தடுத்து 10 போட்டிகளில் இந்திய அணியை வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக போட்டிகளில் இந்தி அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக, 9 போட்டிகளில் வெற்றிபெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனை பின்னுக்குத்தள்ளி இச்சாதனையை கோலி வசப்படுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்