ஆப்நகரம்

‘தல’ தோனிக்கு பின் இம்மைல்கல் சாதனை படைத்த ஒரே இந்தியர் ‘கிங்’ கோலி!

புனே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மேலும் ஒரு மைல்கல் சாதனை படைத்தார்.

Samayam Tamil 10 Jan 2020, 8:49 pm
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி இந்தூரில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil Virat Kohli


இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி புனேவில் நடக்கிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மைல்கல் சாதனை படைத்தார்.

11,000 ரன்கள்
இப்போட்டியில் கோலி 1 ரன் அடித்த போது கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். மேலும் இம்மைல்கல்லை சர்வதேச அளவில் எட்டிய ஆறாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார். தவிர, இம்மைல்கல்லை வேகமாக கேப்டன் என்ற சாதனையும், இளம் கேப்டன் என்ற பெருமையும் பெற்றார் கோலி.

முன்னதாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (15,440 ரன்கள், 324 போட்டிகள்), தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (14,878 ரன்கள், 286 போட்டிகள்), நியூசிலாந்தின் பிளமிங் (11,561 ரன்கள், 303 போட்டிகள்), இந்தியாவின் தோனி (11,207 ரன்கள், 332 போட்டிகள்) மற்றும் ஆலன் பார்டர் (11,062 ரன்கள், 271 போட்டிகள்).


அதிவேகமாக
கோலி இம்மைல்கல்லை அதிகவேகமாக எட்டியுள்ளார். தனது 196ஆவது இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய கோலி இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை (252 இன்னிங்ஸ்) பின்னுக்குதள்ளி முதலிடம் பிடித்தார். தோனி இப்பட்டியலில் (324 இன்னிங்ஸ்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இந்தியர்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு பின், 11000 ரன்களை எட்டிய இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் கோலி. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் டி-20 கிரிக்கெட்டில் அதிகரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி, இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மாவை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடம் பிடித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்