ஆப்நகரம்

ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த கோலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி, கோலிக்கு 200 வது போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

TOI Sports 22 Oct 2017, 7:33 pm
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி, கோலிக்கு 200 வது போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
Samayam Tamil virat kohli becomes top run scorer at 200 odis
ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த கோலி


கோலியின் சாதனைகள் :

>> 200வது போட்டியில் விளையாடிய 14 வது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெறுகிறார்.

>> 200வது போட்டி விளையாடுவதற்கு முன்னரே, இதுவரை 200 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் எடுத்த ரன்களை விட அதிக ரன்களை கோலி தனது 199 போட்டியிலேயே எடுத்து சாதித்துள்ளார்.

>> 200வது போட்டியில் சதமடித்த வீரர்களில் இரண்டாவது வீரராக கோலி திகழ்கிறார். இதற்கு முன்னர் டிவில்லியர் தனது 200வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் எடுத்திருந்தார்.

>> அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி.
அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:
சச்சின் - 49
கோலி - 31
ரிக்கி பாண்டிங் - 30
ஜெயசூர்யா - 28
அசிம் ஆம்லா - 26
சங்ககாரா/ டிவில்லியர்ஸ் - 25

>> வான்கடே மைதானத்தில் சதம் அடித்த 3வது இந்திய வீரர்
108* - அசாருதீன்; எதிர் இலங்கை 1987
114 - சச்சின் எதிர் தெ ஆ 1996
121 - கோலி எதிர் நியூசிலாந்து 2017

நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த போட்டியில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் கோலி.
விராட் கோலி - 17 போட்டி
டீன் ஜோன் - 19 போட்டி
சேவக் - 21 போட்டி
ஜேக் காலிஸ் - 23 போட்டி
மார்க் வாக் / பிரைன் லாரா - 24 போட்டி

>> வான்கடே மைதானத்தில் அதிக ரன் அடித்த வீரர்கள்:
1518 - ஜெயசூர்யா எதிர் இந்தியா 1997
133* டூபிளசி v இந்தியா, 2015
126 மார்க் வாக் v இந்தியா, 1996
121 கோலி v நியூசிலாந்து, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்