ஆப்நகரம்

34 கோடிக்கு வீடு வாங்கியுள்ள விராத் கோலி..!!

மும்பையின் வொர்லி பகுதியில் 34 கோடி ரூபாய்க்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

TNN 17 Jun 2016, 6:09 pm
மும்பையின் வொர்லி பகுதியில் 34 கோடி ரூபாய்க்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
Samayam Tamil virat kohli buys rs 34 crore luxury apartment
34 கோடிக்கு வீடு வாங்கியுள்ள விராத் கோலி..!!


7,171 சதுர அடி பரப்பளவில் கடலை நோக்கி கட்டப்பட்டுள்ள இந்த வீடு 35 வது மாடியில் அமைந்துள்ளது.மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் ஐந்து படுக்கையறைகள் உள்ளன.

இதே இடத்தில் 2014-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங்கும் வீடு வாங்கியுள்ளார்.கடந்த சில மாதங்களாக வீடு வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று,சமீபத்தில்தான் கோலி தரப்பிலிருந்து முழு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னரே இந்த விஷயம் வெளியே கசிந்துள்ளது.

இந்த வீட்டை கோலியும் அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து வந்து பார்வையிட்டதாகவும், அனுஷ்கா சர்மாவுக்கு பிடித்த பின்னரே இந்த வீட்டை வாங்க கோலி ஒத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த ஆடம்பர வீட்டில்தான் அனுஷ்கா சர்மாவும் கோலியும் தங்கள் மனவாழ்வை தொடங்க இருப்பதாக கோலியின் நெருங்கிய நண்பர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.தற்போது கட்டிட பணிகள் நடைபெற்று வரும் இந்த வீடு, 2018-ஆம் ஆண்டுதான் கோலி வசம் ஒப்படைக்கப்படும் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்