ஆப்நகரம்

எளிமையான கேட்சை நழுவவிட்ட விராட் கோலி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிக எளிமையான கேட்ச் ஒன்றை நழுவவிட்டு ரசிகர்களுக்கு கடுப்பேற்றினார்.

TNN 29 Jul 2017, 11:01 am
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிக எளிமையான கேட்ச் ஒன்றை நழுவவிட்டு ரசிகர்களுக்கு கடுப்பேற்றினார்.
Samayam Tamil virat kohli drops a sitter at second slip
எளிமையான கேட்சை நழுவவிட்ட விராட் கோலி!


இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி காலே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியின் 4வது நாளாற இன்று 550 ரன்களை சேஸ் செய்து விளையாடி வருகிறது இலங்கை அணி.

இந்நிலையில், இலங்கை அணியின் தொடக்க வீரர் தரங்கா கொடுத்த மிக எளிமையான கேட்ச் ஒன்றை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தவறவிட்டார். 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த அவருக்கு சமி வீசிய மூன்றாவது ஓவரின் 3வது பந்தில் இந்த எளிமையான கேட்ச் வந்தது. ஆனால், கோலியின் கையில் பட்டு பந்து கீழே விழுந்தது.

ஆனால், அதே ஓவரில் 5வது பந்தில் தரங்கா போல்ட் ஆகி வெளியேறினார். இதனால், கேட்சை விட்ட கோலி ஆசுவசமடைந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்