ஆப்நகரம்

இப்படி உங்களால் செய்ய முடியுமா? - பிரதமர் மோடி, தோனிக்கு சவால் விடுத்த விராட் கோலி

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவல், ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

Samayam Tamil 24 May 2018, 9:53 am
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவல், ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
Samayam Tamil kohli modi



கோலி சவால்:

இந்நிலையில், ரத்தோரின் சவாலை ஏற்ற கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, தல தோனியை டேக் செய்துள்ளார்.

அதில், “நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று செய்துள்ளேன். மேலும் நான் என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, தல தோனியை இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்.” என கூறியுள்ளார்.


கோலியின் சவாலை மோடி, தோனி, அனுஷ்கா ஏற்பாரா என பொருத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்