ஆப்நகரம்

IND vs SA Day 1 Highlights: மாயங்க் மிரட்டல் சதம்... புஜாரா, கோலி அரைசதம்... : தடுமாறும் தென் ஆப்ரிக்க பவுலர்கள்!

புனே: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு மாயங்க் அகர்வால் சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.

Samayam Tamil 10 Oct 2019, 4:45 pm
இந்தியா , தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Samayam Tamil Mayank Agarwal 1


ரோஹித் சொதப்பல்....
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா (14) ரபாடா வேகத்தில் வெளியேறினார்.

மாயங்க் அசத்தல்
பின் மாயங்க் அகர்வாலுடன் இணைந்த புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். சீரான இடைவேளை பவுண்டரிகள் விளாசி அசத்தினர்.


கோலி கலக்கல்...
புஜாரா 58 ரன்கள் எடுத்த போது, ரபாடா வேகத்தில் அவுட்டானார். புஜாரா வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே, டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து மாயங்க் அகர்வால் (108) அவுட்டானார்.


அடுத்து வந்த கேப்டன் கோலி, விக்கெட் சரிவை தடுத்தார். இவருக்கு ரஹானே நல்ல கம்பெனி கொடுக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி (63), ரஹானே (18) அவுட்டாகாமல் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்