ஆப்நகரம்

கோலி ஹீரோ ஆனது இப்படி தான் - சச்சினை உதாரணம் காட்டிய ராபின் சிங்

இந்திய கேப்டன் கோலி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றார். கோலியின் வெற்றிக்கு என்ன காரணம் என முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

TOI Sports 14 Sep 2017, 7:41 pm
இந்திய கேப்டன் கோலி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றார். கோலியின் வெற்றிக்கு என்ன காரணம் என முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virat kohli has the appetite to be the best in the business robin singh
கோலி ஹீரோ ஆனது இப்படி தான் - சச்சினை உதாரணம் காட்டிய ராபின் சிங்


ராபின் சிங் கூறியதாவது:
கோலி மிகச்சிறந்த வீரன் ஆனதற்கு அவரிடம் உள்ள ஒரு பசி தான் காரணம். ஆம், எப்போதும் வெற்றி பெற வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற வேகம் கொண்ட பசி அவரை உயர்த்திக் கொண்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் வெற்றி பெற வேண்டும் என்கின்ற உத்வேகம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மற்றொரு சாதனையாளரான சச்சினும் அப்படி தான். அவர் எங்களுடன் பல முறை அமர்ந்து எப்படி பேட்டிங் செய்வது என்பது குறித்து பேசுவார். எங்களுக்கு கற்றுத் தரும் அதேவேளை, ஏதேனும் ஒரு பேட்டிங் டிப்ஸ் தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளும் வரை எங்களை விடமாட்டார். அவரும் ஓய மாட்டார். இதனால் தான் சச்சினும், கோலியும் சாதனை படைக்கின்றனர் என ராபின் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்