ஆப்நகரம்

எப்படி கோக்கு மாக்கு பண்ணனும்னு கோலிக்கு தெரியும்: சேவக்!

தனக்கு எதிரான விமர்சனங்களை எப்படி காலி செய்ய வேண்டும் என விராட் கோலிக்கு நன்றாக தெரியும், என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.

TOI Sports 12 May 2017, 10:16 pm
மும்பை: தனக்கு எதிரான விமர்சனங்களை எப்படி காலி செய்ய வேண்டும் என விராட் கோலிக்கு நன்றாக தெரியும், என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virat kohli knows how to get back into good form sehwag
எப்படி கோக்கு மாக்கு பண்ணனும்னு கோலிக்கு தெரியும்: சேவக்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டியில், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், கோலி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

இதில் குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி, பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை. அதனால் அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவர் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கோலி மீண்டு வருவார் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ கிரிக்கெட் கடவுளாகவே கருதப்படும் சச்சினுக்கே, இப்படி நடந்தது உண்டு. கோலியும் சாதாரண ஒரு கிரிக்கெட் வீரர் தான். அதனால் அவர் சில நேரங்களில் வீழ்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதை எப்படி சரி செய்ய வேண்டியது என்றும், மீண்டு வருவது எப்படி என்றும் கோலிக்கு நன்றாக தெரியும்,’ என்றார்.


MUMBAI: Unconcerned by the indifferent form exhibited recently by India captain Virat Kohli, former swashbuckling batsman Virender Sehwag said on Friday that a player of his calibre knew how to get out of the rut.

அடுத்த செய்தி

டிரெண்டிங்