ஆப்நகரம்

நாக்கை நீட்டி நக்கல் செய்த கோலி: முறைச்சுகிட்டே போன முஷ்பிகுர்!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேச வீரர் முஷ்பிகுரை அவுட்டாக்கிய பின், அவரை நாக்கை நீட்டி நக்கல் செய்தார் இந்திய கேப்டன் கோலி.

TOI Sports 15 Jun 2017, 6:09 pm
பர்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேச வீரர் முஷ்பிகுரை அவுட்டாக்கிய பின், அவரை நாக்கை நீட்டி நக்கல் செய்தார் இந்திய கேப்டன் கோலி.
Samayam Tamil virat kohli mocks mushfiqur rahim after getting out
நாக்கை நீட்டி நக்கல் செய்த கோலி: முறைச்சுகிட்டே போன முஷ்பிகுர்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.

பர்மிங்ஹாமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை, ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு, முஷ்பிகுர் ரஹீம் அரைசதம் அடித்தார். இவர் 61 ரன்கள் எடுத்த போது, ஜாதவ் வீசிய பந்தை லெக்-சைடில் நின்ற கேப்டன் கோலியை ஏமாற்றி பவுண்டரிக்கு அடிக்க முயற்சித்தார். ஆனால் கோலி, இவரது பேட்டின் திசையை கணித்து கச்சிதமாக கேட்ச் பிடிக்க, முஷ்பிகுர் ஏமாற்றமடைந்தார்.

👅 @imVkohli enjoyed that one!#BANvIND #CT17 pic.twitter.com/tRDKGNFltN — ICC (@ICC) June 15, 2017 இதையடுத்து வெளியேறிய முஸ்பிகுரைப்பார்த்து நாக்கை நீட்டிய கோலி, அவரை கிண்டல் செய்தார். முஷ்பிகுர் ரஹீம் எதுவும் சொல்ல முடியாமல், கோலியை முறைத்தபடி வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்