ஆப்நகரம்

செல்லப்பிராணியை பறிகொடுத்த கிங் கோலி... உணர்ச்சிப்பூர்வமான போஸ்ட்டை வெளியிட்டு உருக்கம்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் ப்ரூனோ என்ற செல்ல நாய்க்குட்டி உயிரிழந்தது.

Samayam Tamil 6 May 2020, 12:04 pm
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆசையாக வளர்த்து வந்த செல்ல நாய்க்குட்டி ப்ரூனோ. இந்த நாய் கோலியுடன் கடந்த 11 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ப்ரூனோ உயிரிழந்தது. இது கோலியை மிகவும் சோகமாக்கியுள்ளது.
Samayam Tamil Virat kohli


ஆர்ஐபி ப்ருனோ
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் கோலி வெளியிட்டுள்ள பதிவில், “ரெஸ்ட் இன் பீஸ் ப்ரூனோ. 11 ஆண்டுகளாக எங்களுடன் வாழ்ந்துள்ளாய் , ஆனால் எங்களது வாழ்நாள் முழுதுவமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளாய். இன்று இன்னும் சிறந்த இடத்திற்கு சென்றுவிட்டாய். கடவுள் உன் ஆத்மாவை சாந்தி அடையச் செய்யட்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram Rest in peace my Bruno. Graced our lives with love for 11 years but made a connection of a lifetime. Gone to a better place today. God bless his soul with peace 🙏❤️ A post shared by Virat Kohli (@virat.kohli) on May 5, 2020 at 8:33pm PDT

இதேபோல கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா, ப்ருனோவுடன் உள்ள போட்டோவை பகிர்ந்து, ஆர்ஐபி ப்ருனோ என குறீப்பிட்டுள்ளார். கோலி, அனுஷ்காவுக்கு பலர் சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram ♥️ Bruno ♥️ RIP ♥️ A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on May 5, 2020 at 8:39pm PDT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக கோப்பை வென்று கொடுப்பார் என் ரசிகர்கள் அதிக ஆர்வமாக இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்