ஆப்நகரம்

சென்னை ரசிகர்களைப் புகழ்ந்து தள்ளிய கோலி: காரணம் இதுதான்!

சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 16 Feb 2021, 6:42 pm
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்ட நிலையில் இந்திய அணி 285 ரன்கள் எடுத்து, 482 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. கடின இலக்கை நோக்கிப் பயணித்த இங்கிலாந்து அணி 164 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.
Samayam Tamil kohli


போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, சென்னை ரசிகர்களை புகழ்ந்து பேசினார். “ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு முறையும் பௌலர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும். ஆட்டத்தின் போக்கை மாற்றியதில் ரசிகர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள். கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது” என்றார் கோலி.

மேலும் அவர், “மைதானாம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அதைக் கண்டு பயப்படவுமில்லை. முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் வரை எடுத்தால் எங்களது (இந்தியா) பந்துவீச்சாளர்கள் எதிரணியினரை கட்டுப்படுத்திவிடுவார்கள் என உறுதியுடன் நம்பினோம். அதுதான் நடந்துள்ளது” என்று கூறிய கோலி, ரிஷப் பந்த் தனது தரத்தை உயர்த்தியிருப்பதாகவும் கோலி கூறினார்.

அறிமுக டெஸ்டில் கலக்கிய அக்‌ஷர்: இந்தியா அபார வெற்றி!
“விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தனது தரத்தை உயர்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரிலிருந்தே அவரது விக்கெட் கீப்பர் பாணியில் நிறைய நேர்மறையான மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. தனது உடல் இடையைக் குறைத்து, தனக்குத்தானே கடுமையாக உழைத்துள்ளார். பந்துகள் நன்றாகச் சுழன்றன. சில நேரங்களில் பவுன்ஸ் ஆனது. அவை அனைத்தையும் நேர்த்தியான முறையில் பந்த் கையாண்டார். இவர் மதிப்பு மிக்க வீரர் என்பதை நாங்கள் அறிவோம்” எனக் கூறினார்.

உள்நாட்டு மைதானத்தில் கேப்டனாக விராட் கோலிக்கு இது 21ஆவது டெஸ்ட் வெற்றியாகும். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்