ஆப்நகரம்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்!

ஒருநாள் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 28 Jan 2021, 10:49 am
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில், இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் 89, 63 அடித்த விராட் கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். காயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்காத ரோஹித் ஷர்மா 837 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் (818), ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் (791) அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.
Samayam Tamil Rohit Kohli


பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணி வீரர் ஜஸ்பரீத் பும்ரா (700) மூன்றாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் (722), ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜிப் உர் ரகுமான் (701) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முஜிப் உர் ரகுமானை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னை ஓரம் கட்டியது நல்லதுக்குத் தான்: மனம் திறக்கும் குல்தீப் யாதவ்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய வங்கதேச வீரர்கள் மெஹிடி ஹசன் (694), முஸ்தபிசுர் ரகுமான் (658) ஆகியோர் நான்காவது மற்றும் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். ஆல்-ரவுண்டர் பிரிவில் வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 420 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 294 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களுக்கு இடையில் 126 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 253 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...
அணிகளைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து (123) முதலிடத்திலும், இந்தியா (117), நியூசிலாந்து (116), ஆஸ்திரேலியா (111) அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றன. வங்கதேசம் 7ஆவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்