ஆப்நகரம்

மீண்டும் இரட்டை சதம் விளாசினார் ரன் மிஷின் கோலி

இலங்கை அணிக்கு எதிரான டெல்லியில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 6வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

TNN 3 Dec 2017, 11:01 am
இலங்கை அணிக்கு எதிரான டெல்லியில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 6வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
Samayam Tamil virat kohli smashed his consecutive double ton
மீண்டும் இரட்டை சதம் விளாசினார் ரன் மிஷின் கோலி


இது விராட் கோலி இந்த ஆண்டில் அடித்துள்ள 5வது அரைசதம் ஆகும். இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற போட்டியிலும் 213 ரன்கள் குவித்த கோலி தொடர்ந்து இந்த போட்டியிலும் இரட்டை சதம் அடித்துள்ளார். இதே போல அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய சாதனையை இந்தியாவின் வினோத் காம்ளி இதற்கு முன்னர் நிகழ்த்தியுள்ளார்.

விராட் கோலி இந்த ஆண்டில் மட்டும் தனது 5 இரட்டை சதங்களை எடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இரட்டை சதத்தை அடித்தார். பின்னர், 2017ஆம் ஆண்டில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் தலா ஒரு இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார். இதன் மூலம் தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் குறைந்தது ஒரு இரட்டை சதமாவது அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வழிநடத்திய கேப்டன்கள் மொத்தமாக 4 இரட்டை சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர். விராட் கோலி 6 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் கேப்டன் பொறுப்பில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் லாராவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்