ஆப்நகரம்

‘தல’ தோனி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய கோலி!

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தற்போதைய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Samayam Tamil 19 Apr 2018, 12:52 pm

ஹைலைட்ஸ்:

வெளியில் இருப்பவர்களின் கருத்துப்படி அணி நடக்கவேண்டும் என்றால், அது கண்டிப்பாக சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தற்போதைய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு உச்சங்கள எட்டியுள்ளது. ஆனால் இவரது ’பார்ம்’ குறித்து எழுந்த சர்ச்சைகளாலும், கடுமையான விமர்சனங்களாலும், முதலில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

வழிவிட்ட தோனி...
பின் ஒருவழியாக ஒருநாள், டி-20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட, தோனி உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக இளம் கோலிக்கு வழிவிட வேண்டும் என மறைமுகமாக கருத்துக்கள் கிளம்ப, கேப்டன் பொறுப்பை கோலியிடம் ஒப்படைத்தார், தோனி.

தொடரும் விமர்சனங்கள்....
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள நிலையில், தற்போது தோனிக்கு வயதாகிவிட்டது, அதனால் இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தவிர, பழைய மாதிரி போட்டியை முடிக்கும் திறனும் தோனியிடம் தற்போது இல்லை என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

எதிர்காலம் என்ன?
இதுகுறித்து டைம்ஸ் நவ்விற்கு சிறப்பு பேட்டியளித்த கேப்டன் கோலி கூறுகையில்,‘வெளியில் இருப்பவர்களின் கருத்துப்படி அணி நடக்கவேண்டும் என்றால், அது கண்டிப்பாக சிக்கலைத்தான் ஏற்படுத்தும். அணி தோல்வியடையும் போது எல்லா மூலைகளில் இருந்தும் கேள்விகள் வரும். ஆனால் வெற்றி பெற்றால் மட்டும் அடுத்து என்ன? என சென்று விடுவார்கள். இதற்காக வெளிக்கருத்துக்களுக்கு இடம் அளிக்க முடியாது.’ என்றார்.

Indian cricket team skipper Virat Kohli, in an exclusive chat with Times Now, brushed aside the questions of MS Dhoni's future saying if the team was to function with the way outsiders do, Indian cricket will be in big trouble. He also said that when the team loses, questions are fired at from all corners but a win is only followed up with a feature or two.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்