ஆப்நகரம்

நாங்க வைக்கிற டெஸ்ட்ல பாஸ் பண்ணுங்க பாப்போம் - கோலி அணிக்கு கிரேம் ஸ்மித் சவால்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் இந்தியாவுக்கு சோதனை காலமே தென் ஆப்ரிக்காவில் தான் என அதன் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

TOI Sports 9 Dec 2017, 5:19 pm
டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் இந்தியாவுக்கு சோதனை காலமே தென் ஆப்ரிக்காவில் தான் என அதன் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virat kohli was in south africa for the team is waiting for the real test graeme smith
நாங்க வைக்கிற டெஸ்ட்ல பாஸ் பண்ணுங்க பாப்போம் - கோலி அணிக்கு கிரேம் ஸ்மித் சவால்


இந்த ஆண்டில் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடரில் வென்று ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளது.

சாதனை படைக்குமா?
இதுவரை தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வென்றதே இல்லை. இதனால் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் வைப்பது போன்று தான் இருக்கும்.

இருப்பினும் தற்போதுள்ள இந்திய அணி, தெ.ஆ.,வின் வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு புவனேஸ்வர் குமார், பும்ரா, சமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சிறப்பான பவுலர்கள் உதவியால் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது.

கிரேம் ஸ்மித் சவால் :
இந்திய அணி நிறைய தொடர்களை தொடர்ச்சியாக வென்றிருந்தாலும், தென் ஆப்ரிக்காவில் தான் கோலி தலைமையிலான அணிக்கு உண்மையான பரிச்சையே ஆரம்பிக்கப் போகிறது. தெ.ஆ எதிராக ஆக்ரோஷமாக பந்துவீசினால் தான் வெற்றியை பெற முடியும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

டிராவிட் நம்பிக்கை :
அதே சமயம் இந்த தடவை இந்தியா நிச்சயம் தெ. ஆ தொடரை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Virat Kohli was in South Africa for the team is waiting for the real test: Graeme Smith
Test cricket continued in the 9 series has been seized by the Indian team

அடுத்த செய்தி

டிரெண்டிங்