ஆப்நகரம்

மேடம் துஸாட்ஸ் அருகாட்சியகத்தில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு மெழுகு சிலை!!

டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது.

Samayam Tamil 28 Mar 2018, 9:25 pm
டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது.
Samayam Tamil விராத் கோலி
மேடம் துஸாட்ஸ் அருகாட்சியகத்தில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு மெழுகு சிலை!!


அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து உட்பட உலகின் பல நாடுகளில் இருக்கும் பிரபலமான மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் துவங்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகங்களில் பல்வேறு துறைகளிலு ம் உலகப் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் காந்தி, பாரத பிரதமர் நரேந்திர மோடி , கிரிக்கெட் வீரர் சச்சின், அப்துல் கலாம் உள்ளிட்ட பல பிரபலங்களின் மெழுகு சிலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

மெழுகு சிலைக்காக அளவெடுக்கப்பட்ட விராத் கோலி

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் மெழுகு சிலையை நிறுவுவதற்காக அவரை அளவெடுத்துள்ளனர். ஏற்கனவே கபில்தேவ் மற்றும் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் இப்போதும் விராத் கோலியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்