ஆப்நகரம்

விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர் விராட் கோலி: இலங்கை வீரர் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமான விளையாடுவது கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை நினைவுபடுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

TNN 7 Aug 2017, 1:50 pm
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமான விளையாடுவது கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை நினைவுபடுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virat kohlis arrogance reminds me of viv richards aravinda de silva
விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர் விராட் கோலி: இலங்கை வீரர் புகழாரம்


இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.



இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி பற்றி பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா இந்திய கேப்டன் விராட் கோலியை வியந்து பாராட்டினார். “சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவர்கள். இப்போது, கோலி இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு அழைந்து வந்திருக்கிறார். களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடு, கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் நினைவை ஏற்படுத்துகிறது.” என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்