ஆப்நகரம்

யாருமே கண்டுக்காத கெயிலை நாங்க ஏன் எடுத்தோம் : சேவக்!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் யாருமே கண்டுக்காத சிக்சர் ராட்ஷன் கெயிலை எடுத்தது ஏன் என சேவக் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2018, 10:10 pm
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் யாருமே கண்டுக்காத சிக்சர் ராட்ஷன் கெயிலை எடுத்தது ஏன் என சேவக் விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil virender sehwag explains kings xipunjabs decision to buy chris gayle
யாருமே கண்டுக்காத கெயிலை நாங்க ஏன் எடுத்தோம் : சேவக்!


இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் சிக்சர் ராட்ஷன் கிறிஸ் கெயிலை, ஏலத்தில் அவரது அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு கூட எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.

ஆனால் மூன்றாவது முறையாக கிறிஸ் கெயிலை ஏலத்தில் அறிவித்த போது அதிரடி மன்னனான சேவக் ஆலோசகராகவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரது அடிப்படை ஏல தொகையான ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ கிறிஸ் கெயிலை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வராதது ஆச்சரியமாக இருந்தது. அவர் எந்தவிதமான அணிக்கும் எப்படிப்பட்ட ஆபத்தான பேட்ஸ்மேன் என்பது தெரியும். அவர் மீது தற்போதும் நம்பிக்கை உள்ளது. எங்கள் அணியின் துவக்க ஆட்டக்காரகளுக்கு அவர் சிறந்த பேக் அப் வீரராக இருப்பார்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்