ஆப்நகரம்

தவனின் இடத்திற்கு சரியான மாற்று வீரர் இவர்தான்: புதுமுக வீரரை கைகாட்டிய சேவாக்!

ஷிகர் தவனுக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து விரேந்தர் சேவாக் பேசியுள்ளார்.

Samayam Tamil 3 Aug 2021, 3:34 pm
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவன், 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 145 ஒருநாள், 68 டி20 மற்றும் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் இதுவரை 184 போட்டிகளில் பங்கேற்றுச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
Samayam Tamil விரேந்தர் சேவாக்


ஓபனர்கள்:

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்துவரை ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் இருவர்தான் இந்திய அணியின் நிரந்தர துவக்க வீரராக இருந்து வருகின்றனர். டி20 போட்டிகளில் தவனுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கக் கடுமையாக போராடி வருகிறார்.

இதற்காக, ஐபிஎல் 13ஆவது சீசன், 14ஆவது சீசனின் முதல் பாதி போட்டிகளில் அதிரடியாக விளையாடி, தன்னுடைய திறமையை நிரூபித்தார். இலங்கை தொடரிலும் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடினார். அடுத்து ஐபிஎல் 14ஆவது சீசனில் எஞ்சிய போட்டிகள் நடைபெறவுள்ளது. இதிலும் சிறப்பாக சோபித்தால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கருதப்படுகிறது.

தவனுக்கு 35 வயது:

தவனுக்கு தற்போது 35 வயதாகிறது. மிஞ்சிமிஞ்சிப் போனால் இன்னும் ஒரு வருடம் மட்டுமே இவர் கிரிக்கெட் விளையாடுவார், அதன்பின்னர் இவர் விளையாட நினைத்தாலும் அணியில் இடம் கிடைக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் ஓபனர் விரேந்தர் சேவாக், தவனுக்கான மாற்று வீரர் குறித்துப் பேசினார்.

சேவாக் பேட்டி:

“தவனுக்கு 35 வயதாகிவிட்டது. இவருக்கான மாற்று வீரர் குறித்து இந்நேரம் பிசிசிஐ சிந்திக்கத் தொடங்கியிருக்கும். என்னை பொறுத்தவரை தவனுக்கான மாற்று வீரர் தேவ்தத் படிக்கல்தான். அவரின் ஆட்டம் அபாரமாக இருக்கிறது. அவரின் ஆட்டத்தை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஐபிஎலில் சதம் விளாசிதான் யார் என்பதை நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமான படிக்கல், பெரிய அளவில் சோபிக்கவில்லை. எதிர்வரும் ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்