ஆப்நகரம்

சேவக் முட்டாள்தனமாக பேசிட்டார்: கங்குலி காட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது பற்றி சேவக் கூறிய கருத்து முட்டாள்தனமானது என்று கிரக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் இந்திய வீரருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

TNN 17 Sep 2017, 4:14 pm
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது பற்றி சேவக் கூறிய கருத்து முட்டாள்தனமானது என்று கிரக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் இந்திய வீரருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virender sehwag spoke foolishly says sourav ganguly later denies
சேவக் முட்டாள்தனமாக பேசிட்டார்: கங்குலி காட்டம்


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளே பதவிக்காலம் கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் முடிந்தது. அவருக்கும் கேப்டன் கோலிக்கும் கருத்து மோதல் இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானார்.

முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவக்கும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தபோதும் அவர் தேர்வாகவில்லை. இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய சேவக், எனக்கும் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்த குழுவுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதால் தன்னால் பயிற்சியாளராக முடியவில்லை என்றும் இனிமேல் பயிற்சியாளர் பதவிக்கு எப்போதும் விண்ணப்பிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
My quote on Sehwag completely false ..right quote ..Sehwag very dear to me .will speak to him soon .. — Sourav Ganguly (@SGanguly99) September 16, 2017 இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் பயிற்சியாளரைத் தேர்வு செய்த பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான சவுரவ் கங்குலி, சேவக் பேசியது முட்டாள்தனமானது என்று காட்டமாக தெரிவித்தார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் தன் கடுமையான கருத்து தவறானது என்றும் என் இனிய நண்பரான சேவக்குடன் நான் விரைவில் இது பற்றி பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்