ஆப்நகரம்

பேட்ஸ்மேன்கள் நடுங்குறாங்க…அந்தளவுக்கு செம்மையா பந்து போடுறாரு: இளம் பௌலருக்கு லக்ஷ்மன் பாராட்டு!

இந்திய பௌலர் குறித்து விவிஎஸ் லக்ஷ்மன் புகழ்ந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 27 Jul 2021, 10:43 am
ஐபிஎல் 13ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சிறப்பாகப் பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய டி20 அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், காயல் காரணமாக அத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
Samayam Tamil விவிஎஸ் லக்ஷ்மன்


அடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், யோ யோ பிட்சன்ஸ் டெஸ்டில் அவர் தேர்ச்சி பெறாததால், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது இலங்கை சுற்றுப் பணத்திற்கான இளம் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்து ஜூலை 25ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமானது. இதில் முதல் டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாகப் பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பேசியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், “வருண் சக்ரவர்த்திக்கு XI அணியில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி. இதற்குமுன் இரண்டு தொடர்களில் சேர்க்கப்பட்டு, பின் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்தார். இவருடைய மாயாஜால ஸ்பின் குறித்து பெரிய பேச்சிகள் இருக்கிறது. வருண் சக்ரவர்த்தியை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களிடம், அவரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாகத் தொடர்ச்சியாக வீசுகிறார். எதிர்கொள்வதற்கே சில நேரங்களில் பயமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசினார்” எனக் கூறினார்.

இந்தியா, இலங்கை இடையிலான முதல் டி20 போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 164 ரன்கள் அடித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி 126 ரன்கள் மட்டும் அடித்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்