ஆப்நகரம்

டி20 உலகக் கோப்பை வேணும்னா, இந்த 2 பேர எடுத்தே ஆகணும்: லக்ஷ்மன் கருத்து!

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இந்த இரண்டு இளம் வீரர்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும் என விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2021, 5:11 pm
டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. சமீப கலமாக இந்திய இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடி வருவதால், உலகக் கோப்பை அணிக்கு யாரைத் தேர்வு செய்வது என்ற விவகாரத்தில் அணித் தேர்வாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
Samayam Tamil விவிஎஸ் லக்ஷ்மன்


உலகக் கோப்பை தொடர் துவங்க இன்னும் சில மாதங்கள் இருப்பதால், தற்போதைக்கு இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் நிச்சயம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சூர்யகுமார், இஷான் கிஷன் அசத்தல்:

2nd ODI: இந்திய அணியில் 2 மாற்றங்கள்…உத்தேச XI அணி இதோ!


சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் புதுமுக வீரர் இஷான் கிஷன் 32 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல், 4ஆவது டி20 போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அபாரமாக செயல்பட்டார்.

லக்ஷ்மன் பேட்டி:


இருவரும் துவக்க போட்டியில் அதிரடி காட்டியதால் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என லக்ஷ்மன் தெரிவித்தார். “சமீப காலமாகப் பல இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், வீரர்களைச் செய்யும் விவகாரம் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும்” என்றார்.

“இருப்பினும், சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அறிமுக போட்டியில் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இருவரின் பெயர்களும் நிச்சயம் இடம்பெற வேண்டும். என்னுடைய அணியில் இவர்களுக்கு நிச்சயம் இடம் கொடுப்பேன். இவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார்.

“வீரர்களைத் தேர்வு செய்யும் விவகாரம் எளிதாக இருக்காது. அணித் தேர்வாளர்கள் நுட்பமாகச் செயல்பட வேண்டி இருக்கும். இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் இப்போதைக்குப் பிரச்சினை இல்லை” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்