ஆப்நகரம்

‘தல’ தோனி... சின்ன ‘தல’ ரெய்னாவுக்கு பவுலிங் செய்ய தடுமாறிய சச்சின் மகன் அர்ஜூன்!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான பயிற்சியில் சச்சின் மகன் அர்ஜூன் பவுலிங்கை தோனி, ரெய்னா உள்ளிட்டோர் எதிர்கொண்டனர்.

Samayam Tamil 26 Jun 2018, 6:10 pm
டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான பயிற்சியில் சச்சின் மகன் அர்ஜூன் பவுலிங்கை தோனி, ரெய்னா உள்ளிட்டோர் எதிர்கொண்டனர்.
Samayam Tamil 2


இங்கிலாந்து செல்லும் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி, ஜூலை 3ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது.

அதற்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக (ஜூன் 27, 29ம் தேதி) இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டப்லினில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனியர்களுக்கு பவுலிங்....
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்தார்.

தடுமாற்றம்.....
ஆனால், சர்வதேச அளவில் அனுபவம் பெற்ற சீனியர் வீரர்களான தோனி, ரெய்னாவுக்கு சரியான லைனில் பவுலிங் செய்ய, சச்சின் மகன் அர்ஜூன் சற்று தடுமாறினார். அதே நேரத்தில் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அர்ஜூனுக்கு எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என பயிற்சி அளித்தார்.

The Indian cricket team touched down in the United Kingdom (UK) and conducted its first practice session ahead of the T20I match against Ireland on Wednesday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்