ஆப்நகரம்

‘தல’ தோனிக்கும் இதே தலை எழுத்துதான்: தேர்வுக்குழு ‘வார்னிங்’!

போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் தோனியாக இருந்தாலும் மாற்றுவீரர் களமிறக்கப்படுவார் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

TOI Sports 15 Aug 2017, 1:10 pm
கொழும்பு: போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் தோனியாக இருந்தாலும் மாற்றுவீரர் களமிறக்கப்படுவார் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we will look at alternatives if ms dhoni doesnt deliver msk prasad
‘தல’ தோனிக்கும் இதே தலை எழுத்துதான்: தேர்வுக்குழு ‘வார்னிங்’!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தவிர, யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

இந்த அணியை தேர்வு செய்ததுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில்,’எப்போது அணியாக செயல்படவேண்டும் என்றால், நேர்மையாக இருப்பது அவசியம். அதனால் அணியின் எல்லா வீரர்களுமெ ஒரேமாதிரி. அது தோனியாக இருந்தாலும் சரி. சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு பதில் வேறு மாற்றுவீரர் களமிறக்கப்படுவார்.’ என்றார்.

"You never know. We don't say it is an automatic thing (selection) but we will see. We are all stakeholders. We all want the Indian team to do well. If he is delivering, why not? If he is not, we will have to look at alternatives," Prasad answered in a pragmatic manner.

அடுத்த செய்தி

டிரெண்டிங்