ஆப்நகரம்

யார் இந்த கலீல் அகமத், புதிதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணியில் புதிதாக கலீல் அகமத் என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 8:34 pm
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணியில் புதிதாக கலீல் அகமத் என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Kaleel Ahamed


ஆசிய கோப்பை 2018 போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைப்பெற உள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியை இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் கலீல் அகமத் என்ற புது முக வீரரை தவிர எல்லா வீரர்களும், நமக்கு நன்கு பரிட்சயமானவர்களாக உள்ளனர்.

யார் இந்த கலீல் அகமத்:
இந்திய அணியில் ராஜஸ்தானை சேர்ந்த கலீல் அகமது என்ற 20 வயது இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் 2016ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியவர்.

அண்மையில் நான்கு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பெற்றவர் கலீல் அகமது. இத்தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை சாய்துள்ளார்.


டிராவிட் தான் வாழ்க்கையை மாற்றினார் :
இதுகுறித்து பேசியுள்ள கலீல் அகமது, “ராகுல் டிராவிட் தான் என் வாழ்க்கையை மாற்றினார். நான் இந்திய ஏ அணியில் விளையாடிய போது மிகவும் பதட்டமாக தொடங்கினேன். அப்போது டிராவிட் கொடுத்த ஆலோசனை, சுதந்திரம், நான் நம்பிக்கையுடன் விளையாட உதவியது. இப்போது இந்திய அணியில் அழைக்கப்பட்டிருப்பது அவர் கொடுத்த ஊக்கத்தால் தான்.” என டிராவிட்டை புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியில் அறிமுகம்;இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் கலீல் அகமது முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்