ஆப்நகரம்

டி20 உலகக் கோப்பை: இந்த அணிதான் வெல்லும்…பாகிஸ்தான் வீரரின் ‘பலே’ கணிப்பு!

டி20 உலகக் கோப்பையை தட்டித்தூக்கப் போவது யார் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் பேசினார்.

Samayam Tamil 29 Jun 2021, 9:05 pm
ஆடவருக்கான 7ஆவது டி20 உலகக் கோப்பை இந்தியாவில்தான் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாகப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாறியுள்ளது.
Samayam Tamil டி20 உலகக் கோப்பை


போட்டிகள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை நடைபெறும். இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்பது குறித்து பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் பேசியுள்ளார்.

தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், “இந்தமுறை டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிதான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும். காரணம், கடந்த 9,10 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தைத்தான் ஹோம் கிரோண்டாக பாவித்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதனால் மைதானத்தின் தன்மை குறித்து இவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். காலநிலையை சுலபமாகச் சமாளித்து விளையாடுவார்கள்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்தியாவுக்கும் அமீரகத்தில் நல்ல அனுபவம் இருக்கிறது. கடந்த ஐபிஎல் சீசன் இங்குதான் நடைபெற்றது. இம்முறையில் இங்குதான் நடக்கவுள்ளது. இதனால் இவர்களால் சிறப்பாக விளையாட முடியும். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களும் இம்மைதானத்தில் சிறப்பாக விளையாட முடியும். சமீப காலமாகவே ஆப்கானிஸ்தான் அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என அக்மல் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்