ஆப்நகரம்

அம்பயர் செய்த தவறால் ஏமாற்றமடைந்த இந்திய அணி

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தவறாக ரிவியூ பயன்படுத்தினாலும், அந்த ரிவியூவை இழக்கமால் தப்பித்தது.

TNN 16 Mar 2017, 6:05 pm
ராஞ்சி: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தவறாக ரிவியூ பயன்படுத்தினாலும், அந்த ரிவியூவை இழக்கமால் தப்பித்தது.
Samayam Tamil why did india not lose review despite maxwell being not out
அம்பயர் செய்த தவறால் ஏமாற்றமடைந்த இந்திய அணி


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகளின் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. ராஞ்சியில் இன்று தொடங்கியுள்ள மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்களை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய வீரர் இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்த்தின் 56 ஓவரின் முதல் பந்தை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். அந்த பந்தில் எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. அம்பயர் அவுட் கொடுக்காததால், ரிவியூ செய்ய இந்திய அணி கோரியது.

ரிவியூவில் இஷாந்த வீசிய அந்த பந்து நோ-பால் என்று தெரிந்தது. இதனால், மேக்ஸ்வெல் நாட் அவுட் என்பது உறுதியானது. ஆனால், ரிவியூ முடிவு சாதகமாக முடியாவிட்டாலும் இந்திய அணிக்கு ஒரு ரிவியூ குறையவில்லை.

பந்து நோ-பால் என்று தெரிந்ததுமே ரிவியூவுக்கு அவசியம் இல்லாமல் ஆகிறது. மேலும், அந்த பந்து நோ-பால் என்பதை அறிவிக்க தவறியதால் தான் இந்திய அணி ரிவியூ செய்திருக்கிறது. இந்த காரணங்களின் அடிப்படையில் இந்தியா அந்த ரிவியூவை தக்கவைத்துக்கொண்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்