ஆப்நகரம்

பந்தை தடுத்த முரளி விஜய்க்கு ஏன் ரன் அவுட் கொடுக்க வில்லை தெரியுமா?

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் முரளி விஜய்க்கு கேட்கப்பட்ட ரன் அவுட்டை அம்பயர் கொடுக்க மறுத்தனர்.

TOI Sports 27 Nov 2016, 3:32 pm
மொகாலி : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் முரளி விஜய்க்கு கேட்கப்பட்ட ரன் அவுட்டை அம்பயர் கொடுக்க மறுத்தனர்.
Samayam Tamil why murali vijay was given not out obstructing the field
பந்தை தடுத்த முரளி விஜய்க்கு ஏன் ரன் அவுட் கொடுக்க வில்லை தெரியுமா?


இந்தியாவின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேல், முரளி விஜய் களமிறங்கினர். 2.6 ஓவரில் இங்கிலாந்தின் ஆன்டர்சன், இந்தியாவின் முரளி விஜய்க்கு பந்து வீசினார். அப்போது பந்தை ஆண்டர்சனிடம் அடித்தார் விஜய். கிரீஸூக்கு சற்று வெளியே நின்றிருந்த விஜயை ரன் அவுட் செய்யும் நோக்கில் ஆண்டர்சன் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஆனால் அந்த பந்து முரளி விஜய்யின் காலில் பட்டு சென்றது. இதையடுத்து ரன் அவுட்டை தடுத்ததாக கூறி ஆண்டர்சன் அம்பயரிடம் முறையிட்டார்.



இருப்பினும் விஜய்க்கு எதிராக ரன் அவுட்டை கொடுக்க மைதானத்தில் இருந்த அம்பயர்கள் மற்றும் 3வது அம்பயர் மறுத்து விட்டனர். இதற்கான காரணத்தை அம்பயர் தெரிவிக்கும் போது, “ஐசிசி விதியின் படி, ரன் அவுட்டை தடுக்கும் நோக்கில் பேட்ஸ் மேன் குறுக்கீடு செய்யக்கூடாது என்பது விதி.

Why Murali Vijay was given not out obstructing the field?https://t.co/3bn2b3Seb3 #bcci via @BCCI — Aravindh (@aravindhtk) November 27, 2016
ஆனால் இந்த இடத்தில், முரளி விஜய் ரன் அவுட்டை தடுக்கும் நோக்கில் எதுவும் செய்ய வில்லை. கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்தது உண்மை தான். ஆனால் ஆண்டர்சன் பந்தை எரிந்த போது பந்தை தடுக்கும் பொருட்டு அவர் சற்று கூட கால்களை நகர்த்த வில்லை.” என கூறி அவுட் கொடுக்க மறுத்து விட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்