ஆப்நகரம்

ரோஹித் ஏன் முக்கியம், ஓபனிங் இறங்க சரியான நபரா? புள்ளி விவரங்கள் இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று துவங்கவுள்ளது.

Samayam Tamil 18 Jun 2021, 2:02 pm
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, இங்கிலாந்து சௌதாம்ப்டானில் இன்று துவங்கவுள்ளது. இதற்கான இந்திய XI அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil ரோஹித் ஷர்மா


இதில் ஓபனர்களுக்கான இடத்தில் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷுப்மன் கில் இதற்குமுன் இங்கிலாந்தில் விளையாடியது கிடையாது. ரோஹித் ஷர்மா இதற்குமுன் இங்கிலாந்து விளையாடியிருந்தாலும் ஓபனராக களமிறங்கியது கிடையாது. மிடில் வரிசையில்தான் களமிறங்கினார். இதனால், இங்கிலாந்து மைதானத்தில் இருவரும் அறிமுக ஓபனர்கள் என்று கூட கூறலாம்.

ரெகுலர் ஓபனர் மயங்க் அகர்வால் இருக்கும்போது, டெஸ்டில் அதிகமாக மிடில் வரிசையில் களமிறங்கும் ரோஹித் ஷர்மாவை ஏன் ஓபனராக களமிறக்க வேண்டும் எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் நபர்கள், ‘அணியின் மிடில் வரிசை பலமாக உள்ளது. இதனால் அந்த இடங்களில் ரோஹித்துக்கு இடம் கிடைக்காது. அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால்தான், கடந்த சில போட்டிகளில் அவர் ஓபனராக களமிறங்குகிறார் எனப் பதிலளித்து வருகின்றனர்.

மேலும் அவரது ரெக்கார்ட்ஸுகும் சிறப்பாக உள்ளது. ரொஹித் அதிக ரன்கள் குவிக்கும் போட்டிகளில் இந்தியாதான் வெற்றிபெற்றிருக்கிறது.

ரோஹித் 7 முறை சதம் அடித்தபோது, 8 முறை நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தபோது, 10 முறை 100+ பார்ட்னர்ஷிப் அமைத்தபோது, 2 சிக்ஸர்களுக்கு மேல் அடித்தபோது இந்திய அணிதான் வெற்றிபெற்றிருக்கிறது.

இதனால், இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்