ஆப்நகரம்

Video : இந்திய சுவரை ‘ஜாமி’ என அழைக்கப்படுவது ஏன்?

இந்திய சுவர் என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். இவர் இன்று 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

TNN 11 Jan 2017, 5:10 pm
இந்திய சுவர் என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். இவர் இன்று 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
Samayam Tamil why was rahul dravid nicknamed jammy
Video : இந்திய சுவரை ‘ஜாமி’ என அழைக்கப்படுவது ஏன்?




வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இவரின் விக்கெட் சிம்ம சொப்பனமாக இருந்தது. எவ்வளவு வேகமான பந்தையும் தடுத்தாடுவதில் கில்லாடி. இவரை சிறுவயதிலிருந்து ஜாமி என செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார். இதற்கு காரணம் இவரது தந்தை ஜாம் தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். அவர் சிறுவயதில் தனது பயிற்சி மற்றும் கிரிக்கெட் போட்டிக்கு செல்லும் போது அவரது தாய் எப்போதும் பிரட் மற்றும் ஜாம் கொடுத்து அனுப்புவாராம்.

அதுவே சில நட்களில் அவருக்கு ஜாமி என பெயர் வர காரணமாயிற்று. அவர் கிரிக்கெட்டில் புகழ் பெற்ற பின் அவர் கிசான் ஜாம் விளம்பரத்தில் நடித்தார். அதில் ஜாமை பெறுவதற்காக பெண் வேடன், புத்த பிச்சு, பேய் வேடம் என பல வேடங்களில் வருவது போது அந்த விளம்பரம் அமைந்திருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்