ஆப்நகரம்

எங்க காலத்த விட இப்போ இந்தியர்கள் அசத்துறாங்கப்பா - அரவிந்த டி சில்வா

தற்போதுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 90களில் இருந்த அணியை விட சிறப்பாக செயல்படுகின்றனர் என இலங்கையின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Mar 2018, 5:11 pm
தற்போதுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 90களில் இருந்த அணியை விட சிறப்பாக செயல்படுகின்றனர் என இலங்கையின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil with brilliant bowlers current indian team is a better side than 90s aravinda de silva
எங்க காலத்த விட இப்போ இந்தியர்கள் அசத்துறாங்கப்பா - அரவிந்த டி சில்வா

இந்தியா அபாரம்:
கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பான வெற்றிகளைப் பெற்று வருகின்றது. கடந்த 2016 முதல் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, சஹால், குல்தீப் யாதவ் போன்ற பவுலர்கள் கோலிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

எப்பொழுது வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறுகின்றனரோ அப்போது ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

இருப்பினும் அனைத்து வகை சூழலிலும் விக்கெட்டை எடுக்கும் பவுலரை இந்தியா உருவாக்க வேண்டியது அவசியம். அது ஒன்று மட்டும் தான் இந்தியாவிடம் இல்லை.
மற்றபடி தற்போதுள்ள இந்திய அணி 90களில் இருந்த இந்திய அணியை விட மிக சிறந்த வீரர்களை கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

இலங்கை மோசம்:
இலங்கையில் சீராக எப்போதும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் இல்லை. கோலி போன்ற சிறந்த வீரரும், கேப்டனும் உருவாக்குவது இலங்கைக்கு அவசியமான ஒன்று என அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்