ஆப்நகரம்

IPL 2019: ‘நான் என்ன தப்பு செஞ்சேன்’... ஐபிஎல்., ஏலத்தால் மனோஜ் திவாரி புலம்பல்!

ஜெய்ப்பூர்: அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வராத காரணத்தால், மனோஜ் திவாரி புலம்பியுள்ளார்.

Samayam Tamil 19 Dec 2018, 6:21 pm
ஜெய்ப்பூர்: அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வராத காரணத்தால், மனோஜ் திவாரி புலம்பியுள்ளார்.
Samayam Tamil Manoj-Tiwary


இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடர் வெற்றிகராமாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 12வது தொடரை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என பிசிசிஐ., பெரும் குழப்பத்தில் உள்ளது.

அரசியல் கட்சியைப்போல....
இந்தியாவில் அடுத்த ஆண்டு, பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால், அந்த தேதிகளில் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால், இந்தியாவுக்கு வெளியே இத்தொடரை முழுமையாக மாற்றுவதா அல்லது பாதி தொடரை மட்டும் வெளியே மாற்றுவதா என்பது தேர்தல் கமிஷன் கைகளில் உள்ளது.

இரண்டு முறை....
இதேபோல இந்தியாவில் கடந்த 2009 (தென் ஆப்ரிக்கா), 2014 (யுஏஇ.,) என இத்தொடரை அந்நிய மண்ணில் பிசிசிஐ., வெற்றி கரமாக நடத்தியுள்ளது. ஆனால் இம்முறை மேலும் சில சிக்கல்கள் பிசிசிஐ.,க்கு காத்திருக்கிறது.
ஏலம்:
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்ததுல். அதில் எல்லா அணிகளும் தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்து ஏலத்தில் எடுத்தது.
இதில் மனோஜ் திவாரியை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. இது அவரை வருமடையச்செய்துள்ளது. தன் ஆதங்கத்தை டுவிட்டரில் கொட்டி தீர்த்துள்ளார் திவாரி. இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ சில விஷயங்கள் வியப்பாக உள்ளது. இந்திய அணிக்காக சதம் அடித்த பின், 14 போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டேன்.
2017 ஐபிஎல் தொடரில் ஏராளமான பரிசுகள் பெற்றேன். எது தவறானது என ஆச்சரியமாகவுள்ளது. " என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்