ஆப்நகரம்

WPL 2023: ‘ஒரேயொரு ஆள்’…சிங்கம் மாதிரி..ஆர்சிபியை கதறவிட்டு அசத்தல்: மும்பை இந்தியன்ஸ் மீண்டும் பிரமாண்ட வெற்றி!

ஒரேயொரு ஆள் சிங்கம் மாதிரி விளையாடி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு அபார வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 7 Mar 2023, 7:11 am
மகளிர் ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர், ஆர்சிபி மகளிர் அணிகள் மோதின.
Samayam Tamil மும்பை இந்தியன்ஸ் மகளிர்


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி இன்னிங்ஸ்:

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா 23 (17), டிவைன் 16 (11) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. தொடர்ந்து திஷா கசத் 0 (2), எல்லிஸ் பெர்ரி 13 (7), அதிரடி வீராங்கனை க்நைட் 0 (1) போன்றவர்கள் சொதப்பியதால், ஆர்சிபி மகளிர் அணி 100 ரன்களை தொடுவதே சந்தேகம் எனக் கருதப்பட்டது.

அந்த சமயத்தில் லோயர் மிடில் ஆர்டர் வீராங்கனை ரீச்சா கோஷ் 28 (26), கனிகா அனுஜா 22 (13), ஸ்ரீயங்கா படேல் 23 (15), மகன் சுட் 20 (14) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதால், ஆர்சிபி மகளிர் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 155/10 ரன்களை சேர்த்தது.

ஹெய்லி மேத்யூஸ் 3/28 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹெய்லி மேத்யூஸ் 77 (38), யாஷ்டிகா பேடியா 23 (19), நாட் சீவர் பர்ன்ட் 55 (29) ஆகியோர் அடுத்தடுத்து அபாரமாக விளையாடியதால், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 14.2 ஓவர்களில் 159/1 ரன்களை சேர்த்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதல் போட்டியில் குஜராத்திற்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற்றிருந்தது.

3 விக்கெட்களையும், 77 ரன்களையும் குவித்த ஹெய்லி மேத்யூஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்