ஆப்நகரம்

நூற்றாண்டுப் பிறகு நடக்கவிருந்த அதிசயம்…‘2424 டெஸ்ட்’…எல்லாம் போச்சு, ரசிகர்கள் கவலை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jun 2021, 3:05 pm
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, இங்கிலாந்து சௌதாம்டானில் இன்று பிற்பகல் 3:30 மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டாஸ் 2:30 மணிக்குப் போட்டிருக்க வேண்டும். ஆனால், மழை காரணமாக டாஸ் போடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil இங்கிலாந்து சௌதாம்ப்டான்


மழை நேற்று இரவு முதல் பெய்து வருகிறது. நாளை வரை நீடிக்கும் என இங்கிலாந்து சௌதாம்ப்டான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

கிரிக்கெட்டில் முதன்முறையாக டெஸ்ட்தான் விளையாடப்பட்டது. 1877ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள்தான் மோதின. கிரிக்கெட் அதன்பிறகு மெல்ல வளர்ச்சியடைந்து ஒருநாள், டி20, டி10 சுருங்கி வருகிறது. இதுவரை ஒருநாள், டி20 கிரிக்கெட்டிற்கு மட்டுமே உலகக் கோப்பை நடத்தப்பட்டுள்ளது. டெஸ்டிற்கு நடத்தப்படவில்லை. கிட்டதட்ட நூற்றாண்டு கடந்து நீடித்து நிற்கும் டெஸ்டிற்கு உலகக் கோப்பை நடத்தி, இதனைப் பிரபலப்படுத்த வேண்டும் என ஐசிசி முடிவு செய்தது.

இதனையடுத்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019ஆம் ஆண்டு துவங்கியது. தற்போது இத்தொடர் இறுதிப் போட்டிவரை வந்துள்ளது. 1877ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை, 2424 டெஸ்ட் போட்டிகள் கடந்த பிறகு தற்போது முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் மழை குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

‘வருண பகவானே தயவுசெய்து 5 நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள். அதன்பிறகு சௌதாம்ப்டான் பக்கம் வா’ என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

இரண்டு நாட்கள்வரை மழை நீடிக்கும் என சௌதாம்ப்டான் வானிலை மையம் தெரிவித்திருப்பதால் போட்டி டிரா ஆக அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இப்படி நடக்கும் பட்சத்தில், கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்