ஆப்நகரம்

’கோச்’ இல்லேன்னா இப்போ என்ன? : 'தல’ இருக்கும் போது என்ன கவலை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளர் இல்லை என கவலைபட தேவையில்லை, அந்த இடத்துக்கு தோனி உள்ளார்.’ என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

TOI Sports 27 Jun 2017, 2:57 pm
போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளர் இல்லை என கவலைபட தேவையில்லை, அந்த இடத்துக்கு தோனி உள்ளார்.’ என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil yuvraj singh mahendra singh dhoni mentoring indian team says batting coach sanjay bangar
’கோச்’ இல்லேன்னா இப்போ என்ன? : 'தல’ இருக்கும் போது என்ன கவலை!


வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இத்தொடரில் பங்கேற்கும் முன் இந்திய கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ளேவுக்கும் ஏற்பட்ட வாய்க்கா தகராறு காரணமாக, கும்ளே பதவிவிலகினார். இதையடுத்து இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் சென்றது. பிசிசிஐ., புதிய பயிற்சியாளரை தேடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தோனி இருக்கும் வரைபயிற்சியாளர் இல்லை என்ற கவலைப்பட தேவையில்லை என பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாங்கர் கூறுகையில்,’ அணியில் அனுபவம் மிக்க வீரர்களான தோனி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இருக்கும் போது, பயற்சியாளர் இல்லை என்ற கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அணி வீரர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளனர். பயிற்சியாளர் மட்டும் எல்லாமே செய்துவிட முடியாது, களத்தில் வீரர்களுக்கு அனுபவ வீரர்களின் ஆலோசனையும் அவசியம்.’ என்றார்.


PORT OF SPAIN: Indian batting coach Sanjay Bangar on Sunday revealed that experienced batsmen Yuvraj Singh and former skipper Mahendra Singh Dhoni are mentoring the side after coach Anil Kumble stepped down from his post just before the West Indies tour.

அடுத்த செய்தி

டிரெண்டிங்