ஆப்நகரம்

என் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...!

நாக்பூர்: தனது சாதனையை காலி செய்த தீபக் சகாரை, சகால் கேலி செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 11 Nov 2019, 8:59 pm
இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய வீரர் தீபக் சகார், 6 விக்கெட் வீழ்த்தி புது சாதனையை அரங்கேற்றினார். தவிர, ஆண்கள் டி-20 சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
Samayam Tamil Deepak-Chahar-Yuzvendra-Chahal-and-Shreyas-Iyer


சகால் காட்டம்
இதற்கிடையில் இப்போட்டியில், 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்திய சகார், இந்திய சுழற்பந்துவீச்சாளர் சகாலின் சாதனையை தகர்த்து டி-20 அரங்கில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார். இதையடுத்து போட்டிக்கு பின் சகாரை பேட்டியெடுத்த சகால், தனது சாதனையை தகர்த்த, சகாருக்கு வெட்கமாக இல்லையா என கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இயான் சாப்பல்!

சகால் டிவி...
பொதுவாக போட்டிக்கு பின் சிறப்பாக செயல்பட்ட வீரர்களிடம் சகால் டிவி என பேட்டி கேட்பது வழக்கம். அதில் நேற்றைய ஆட்டநாயகன் தீபக் சகாரை அறிமுகம் செய்த சகால், ‘இந்த சிறந்த பந்துவீச்சு குறித்தும், எனது சாதனையை தகர்த்தது குறித்தும் செல்லுங்கள்’ என கேள்வி கேட்டார்.


ஐபிஎல் அனுபவம்...
இதற்கு பதில் அளித்த சகார், தனது சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஐபிஎல் அனுபவம் தான் சாதிக்க பெரிதும் உதவியதாக தெரிவித்தார். இவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயரும் பேட்டியில் கலந்து கொண்டார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் 4வது வீரருக்கான தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என பெரிதும் நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்