ஆப்நகரம்

பயிற்சி எடுக்க மாட்டோம் - அடம்பிடிக்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடாமல் வீரர்கள் மிரட்டி வருகின்றனர்.

Samayam Tamil 5 Jun 2018, 2:11 pm
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடாமல் வீரர்கள் மிரட்டி வருகின்றனர்.
Samayam Tamil zimbabwe.


சம்பளம் கொடுக்கவில்லை :

ஜிம்பாப்வே பொருளாதாரம் மிக மோசமாக உள்ள நிலையில், அதன் கிரிக்கெட் நிர்வாகம் அதை விட மோசமாக உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூட திணறி வருகின்றது. அண்மையில் போதுமான பணம் இல்லாததால் பாகிஸ்தான் அணி விளையாட வர வேண்டாம் என கூறியது.

ஜூலை மாதம் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் தலைநகர் ஹராரேயில் நடைப்பெற உள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடப்போவதில்லை என புறக்கணித்து வருகின்றனர்.

வீரர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததோடு, கடந்தாண்டு ஜூன் மாதம் இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய போட்டியிலிருந்து போட்டிக்கான ஊதியம் வழங்கப்படவிலை என குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு வருட காலமாக போட்டிக்கான ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதால் வீரர்கள் மிகவும் வாடிப்போய் உள்ளனர்.

இதனால் ஜிம்பாப்வே அணி நிர்வாகத்தை மிரட்டும் பொருட்டு, முத்தரப்பு போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட முடியாது என வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு இந்திய நிர்வாகி:

இந்தியாஅணிக்கான நிர்வாகியாக இருந்த லால்சந்த் ராஜ்புட், அடுத்த வாரம் ஜிம்பாப்வே அணிக்கான புதிய பயிற்சியாளராக பணியமர்த்தப்பட உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்