ஆப்நகரம்

சச்சின் அடித்த முதல் சதம்: ஒரு சின்ன பிளாஷ் பேக்!

சச்சின் டெண்டுல்கர் முதல் சதம் அடித்தது குறித்து ஒரு சிறிய பிளாஷ்பேக்கை பார்க்கலாம்.

Samayam Tamil 14 Aug 2020, 2:08 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று முதல் சதத்தைப் பதிவு செய்தார். மறுநாள் சுதந்திர தினம், இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, சச்சின் பொறுமையாக காந்திய வழியைப் பின்பற்றி இங்கிலாந்து மண்ணில் அதன் வெற்றியைத் தடுத்தார்.
Samayam Tamil sachin tendulkar


ஆங்கிலேயர்களை ஆகஸ்ட் 15ஆம் தேதி விரட்டியடித்ததையும், ஆங்கில தேசத்தின் வெற்றி வாய்ப்பை ஆகஸ்ட் 14ல் தட்டிப்பறித்ததையும் ஒப்பிட்டு இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் 5ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 17 வயதான சச்சின் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுதான் அவருக்கு முதல் சதம். அதற்குமுன் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர்.

கருண் நாயருக்கு காய்ச்சல்! ஐயயோ... இது கொரோனா கிடையாது என அலறும் பஞ்சாப் டீம் ஓனர்!

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 519 ரன்களை குவித்திருந்தது. கேப்டன் கரகாம் கூச் 116 ரன்களும், ஆத்தர்டன் 131 ரன்களையும் எடுத்தனர். அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் முகமது அசாருதீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 243 பந்துகளைச் சந்தித்து 21 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 179 ரன்களை குவித்த நிலையில், சச்சின் 68 ரன்களை எடுக்க இந்திய அணி 432 ரன்கள் சேர்த்தது.

இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து 320/4 எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 90 ஓவர்களில் 408 ரன்கள். வெற்றிக்கு வாய்ப்பு குறைவு என்று தெரிந்ததால், டிரா செய்ய இந்திய அணி போராடியபோது. சித்து, ரவி சாஸ்திரி வந்த வேகத்தில் நடையைக் கட்ட, 35/2 என இந்தியா தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் எடுத்திருந்த மஞ்சுரேக்கார், இதில் 50 ரன்களை சேர்த்தார். அசாருதீன் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 127/5 என இந்தியா தோல்வியை நோக்கிப் பயணித்தது. அப்போது சச்சின் களமிறங்கினார்.

கெத்து காட்டும் இங்கிலாந்து பௌலர்கள்... தடுமாறும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்!!

மறுநாள் ஆகஸ்ட் 15, இந்தியச் சுதந்திர தினம். இப்போட்டியில் எப்படியும் இந்தியா தோல்வியடைந்து விடும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சுதந்திர போராட்ட வீரர் போலக் களத்தில் சச்சின் செயல்பட்டார். ஜெனரல் டயர் போல் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாகப் பந்து வீசினாலும், சச்சின் பொறுமையாகக் காந்திய வழியில் பேட் செய்தார். இதனால், இங்கிலாந்து அணியின் வெற்றி தடுக்கப்பட்டது. இந்தியர்களுக்கு, சுதந்திர தின பரிசாக சச்சின் டெண்டுல்கரின் சதம் அமைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்