ஆப்நகரம்

T20 World Cup 2021: ஹார்திக் பாண்டியவுக்கு மாற்று ஸ்பின்னர்தான்: அஜித் அகார்கர் செம்ம விளக்கம்!

ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று ஸ்பின்னர்தான் என விவிஎஸ் லக்ஷ்மன் பேசியுள்ளார்.

Samayam Tamil 19 Oct 2021, 6:12 pm
டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
Samayam Tamil அஜித் அகார்கர்


ஹார்திக் ஏமாற்றம்:


முதல் பயிற்சி ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார். இதனால், இவர் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரை அப்படி நடக்கவில்லை. மேலும் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் ஓவருக்கு 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள். இதனால், பந்துவீச்சைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

அகார்கர் பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் அஜித் அகார்கர், ஒருவேளை ஹார்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்றால், உடனே நீக்கப்பட்டு ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் எனக் கூறினார். “அமீர மைதானங்கள் சுழலுக்கு சாதகமானவை. பிட்ச் கண்டிஷன் சரியாக இருந்தால் 5 பௌலர்கள் அதாவது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது சரியான முடிவாக இருக்கும். அதே, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தால், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கியே ஆக வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “மூன்று ஸ்பின்னர்களில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என்பதால் ஜடேஜாதான் அந்த இடத்திற்கு தகுதியானவராக இருப்பார். அணியில் ஏற்கனவே 5 பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஹார்திக் பாண்டியா களமிறங்க முடியாது. இதனால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானங்களில் ஹார்திக் பாண்டியாவுக்கு இடம் கிடைப்பது கடினம்தான்” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்