ஆப்நகரம்

ராகுலுடன் ஓபனராக களமிறங்கப் போவது யார்? ரோஹித்தா, இஷான் கிஷனா? கோலி அதிரடி பதில்!

ராகுலுடன் ஓபனராக களமிறங்கப் போகும் வீரர் யார் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

Samayam Tamil 19 Oct 2021, 5:45 pm
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 17 (13), ஜோஸ் பட்லர் 18 (13), டேவிட் மலான் 18 (18) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இறுதியில் ஜானி பேர்ஸ்டோ 49 (36), லிவிங்ஸ்டன் 30 (20), மொயின் அலி 43 (20) ஆகியோர் மிரட்டலாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 188/5 ரன்கள் சேர்த்தது.
Samayam Tamil விராட் கோலி


இந்திய ஓபனர்கள்:

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல் 51 (24), இஷான் கிஷன் 70 (46) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக மாற்றினர். இதனால், இந்திய அணி 19 ஓவர்களில் 192/3 ரன்கள் சேர்த்து அபார வெற்றிபெற்றது.

தோனிக்கு ஓகே’…ரெய்னாவுக்கு வாய்ப்பிருக்கா? கப்சிப் என இருக்கும் சிஎஸ்கே நிர்வாகம்: ஸ்ரீனிவாசன் பல்டி!

ரோஹித்துக்கு சிக்கல்:


இதனால், ஓபனருக்கான போட்டியில் கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா ஆகியோர் இருப்பதாக தெரிகிறது. ரோஹித் தற்போது சரியான பார்மில் இல்லை. ஒருவேளை கஷனுக்குப் பதிலாக ரோஹித் களமிறக்கப்பட்டாலும், ஒரு போட்டியில் சொதப்பினாலும்கூட வாய்ப்பு பறிபோய்விடும். இதனால், அவர் நெருக்கடியுடன் விளையாடும் சூழல் உருவாகலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கோலி பேட்டி:

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, “டி20 உலகக் கோப்பையில் இந்திய ஓபனர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா ஆகியோர்தான் இருப்பார்கள். நான் (கோலி) மூன்றாவது இடத்தில் களமிறங்குவேன்” எனத் தெரிவித்தார். இதனால்,இஷான் கிஷனுக்கு நான்காவது இடம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. சூர்யகுமார் யாதவ் 5ஆவது இடத்தில் களமிறக்கப்படலாம். இருப்பினும், ரோஹித் ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும், கிஷன் ஓபனராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதால், ரோஹித் முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்