ஆப்நகரம்

Ind vs Aus: ‘பயிற்சி ஆட்டம்’ ஆஸியை அலறவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்: மெகா வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

Samayam Tamil 20 Oct 2021, 6:57 pm
டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்படவில்லை. டாஸ் போட ரோஹித் ஷர்மா சென்றார். டாஸ் இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த நிலையில், ரோஹித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
Samayam Tamil இந்திய அணி


ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் டேவிட் வார்னர் வழக்கம்போல படுமோசமாக சொதப்பி 7 பந்துகளில் ஒரு ரன் சேர்த்து, அஸ்வின் சுழலில் LBW ஆனார். இந்நிலையில், அடுத்த பந்திலேயே மிட்செல் மார்ஷும் 0 (1) நடையைக் கட்டினார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்சும் 8 (10) ஜடேஜா பந்துவீச்சில் LBW ஆனதால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 11/3 என மாறியது.

இதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அப்போது 7ஆவது ஓவரை விராட் கோலி வீசி, வெறும் நான்கு ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார். ஹார்திக் பாண்டியா, பந்துவீச வரவே இல்லை. தொடர்ந்து 13ஆவது ஓவரை வீசிய கோலி 8 ரன்களை கசியவிட்டார்.

அடுத்து ராகுல் சஹார் 14ஆவது ஓவரை வீசிய நிலையில், மேக்ஸ்வேலை 37 (28) வீழ்த்தி பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். தொடர்ந்து ஸ்மித், ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதனால், 10 ஓவர்களில் 57/3 என இருந்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 152/5 ஆக உயர்ந்தது. ஸ்மித் 57 (48), ஸ்டாய்னிஸ் 41 (25) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். இந்திய தரப்பில் அஸ்வின் 12 பந்துகளைவீசி 2/8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல் 39 (31), ரோஹித் ஷர்மா 60 (41) ஆகியோர் சிறப்பான துவக்கம் தந்தனர். ரோஹித் ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் 38 (27), ஹார்திக் பாண்டியா 14 (8) ஆகியோர் சிறப்பாக விளையாடி 17.5ஆவது ஓவரில் அணிக்கு 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்