ஆப்நகரம்

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள்: பிரேசில் புதிய சாதனை

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையை பிரேசில் அணி நிகழ்த்தியுள்ளது.

Samayam Tamil 3 Jul 2018, 11:58 am
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையை பிரேசில் அணி நிகழ்த்தியுள்ளது.
Samayam Tamil DhHIr8cX0AI8ZN4


உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.

இத்தொடரில் திங்கட்கிழமை நடைபெற்ற நாக்அவுட் சுற்று போட்டியில் பிரேசில் அணி மெக்சிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் அடித்த இரண்டு கோல்கள் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய உலகக் கோப்பை போட்டிகளில் 228 கோல்கள் அடித்துள்ளது.

ஜெர்மனி (226), அர்ஜெண்டினா (137), இத்தாலி (128), பிரான்ஸ் (113) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பிரேசிலைச் சேர்ந்த 79 வீரர்கள் உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்