ஆப்நகரம்

ஒரு சான்ஸ் போதும்... அவரு ரொம்ப டேஞ்சுரஸ்... பிரான்ஸ் அணி கால்பந்து பயிற்சியாளர் கொடுத்த அலர்ட்!

உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் போலந்திற்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் இன்று மோதுகிறது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 4 Dec 2022, 2:06 pm

ஹைலைட்ஸ்:

  • ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இன்று மோதும் பிரான்ஸ், போலந்து அணிகள்
  • ராபர்ட் லெவன்டவ்ஸ்கி மிகவும் டேஞ்சரான வீரராக திகழ்வார்
  • பிரான்ஸ் வீரர்களுக்கு பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் அறிவுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Didier deschamps
Source: Twitter
கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரில் 3வது ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பிரான்ஸ், போலந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அல் துமாமா மைதானத்தில் நடக்கிறது. இதில் வெல்லும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் எச்சரிக்கையாக விளையாடுமாறு பிரான்ஸ் அணிக்கு பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் அறிவுறுத்தியுள்ளார். அப்படி என்ன விஷயம் என்கிறீர்களா?

போலந்தின் டேஞ்சுரஸ் வீரர்
எல்லாம் போலந்து அணியை பற்றித் தான். இந்த அணியில் 34 வயதாகும் ராபர்ட் லெவன்டவ்ஸ்கி நட்சத்திர வீரராக விளங்குகிறார். இவருக்கு ஒரேவொரு வாய்ப்பு கிடைத்தால் போதும். கோலாக்காமல் விடவே மாட்டார். இவரை பற்றி டிடியர் டெஸ்சாம்ப்ஸ் கூறுகையில், நிச்சயம் லெவன்டவ்ஸ்கி சிறந்த வீரர் தான். மிகவும் டெக்னிக்கலாக விளையாடக் கூடியவர். லீக் சுற்றில் அவருக்கு போதிய கோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
1,000வது போட்டியில் மெஸ்ஸி படைச்ச உலக சாதனை... காலிறுதிக்கு டிக்கெட் போட்ட அர்ஜென்டினா!
சவாலான பிரான்ஸ் அணி

ஒரேவொரு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும். அப்புறம் அவர் எதிரணிக்கு டேஞ்சுரஸ் வீரராக மாறிவிடுவார். எனவே பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் அவரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதேசமயம் அவரை பார்த்துக் கொண்டு மற்ற வீரர்களை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். போலந்து அணிக்கும் நல்ல சவால் காத்திருக்கிறது. ஏனெனில் நம்முடைய அணியிலும் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கின்றனர் என்று கூறினார்.

பார்சிலோனா வாய்ப்புகள்

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டிக்கும் தலா 2.3 ஷாட்கள் மட்டுமே லெவன்டவ்ஸ்கி-க்கு கிடைத்தது. அதுவே லா லிகா லீக்கில் பார்சிலோனா கிளப் அணியில் ஆடும் போது ஒவ்வொரு போட்டிக்கும் தலா 3.92 ஷாட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு கோல் மழை பொழிந்து வருகிறார். எனவே கோல் வாய்ப்புகள் கிடைத்தால் லெவன்டவ்ஸ்கி டேஞ்சுரஸாக மாறிவிடுவார். இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு பிரான்ஸ் அணி செயல்பட வேண்டும்.
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி எப்போது? பரிசுத் தொகை? எந்தெந்த அணிகள்?
வலுவான பிரான்ஸ் பட்டாளம்

ஏனெனில் சிறிய அலட்சியமும் கனவை கலைத்துவிடும். அதன்பிறகு உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதில் சிக்கலாகி விடும் என்பதில் சந்தேகமில்லை. பிரான்ஸ் அணியில் காயம் தொடர்பான பிரச்சினைகள் பெரிதாக எதுவும் இல்லை. லாரிஸ், கோனடே, சலிபா, கைலியன் எம்பாப்பே, கிறிஸ்மன், டெம்பேலே, ஜிரவுட் என பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்.

வரலாறு மீண்டும் திரும்புமா?

பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் தியரி ஹென்றி சாதனையை முறியடிக்க ஜிரவுட் காத்திருக்கிறார். போலந்து அணியில் லெவன்டவ்ஸ்கி, மிலிக், பியாடெக், செசிஸ்னி, கிவியர், ஜெலின்ஸ்கி உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். முன்னதாக 1982 உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் போலந்து, பிரேசில் அணிகள் மோதியிருந்தன.

இதில் 3-2 என்ற கோல்கணக்கில் போலந்து வெற்றி பெற்றிருந்தது. இதுவே உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய ஒரே ஒரு போட்டியாகும். அதன்பிறகு இன்று (டிசம்பர் 4) இரவு தான் மீண்டும் மோதவுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்