ஆப்நகரம்

ஜெர்மனியை வென்று சாதித்த தென் கொரியா வீரர்கள் மீது அந்நாட்டவர் தாக்குதல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய தென் கொரியா வீரர்களை வரவேற்கும் விழாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2018, 2:12 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய தென் கொரியா வீரர்களை வரவேற்கும் விழாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil South Korea


21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியா அணி, ஸ்வீடன், மெக்ஸிகோ, ஜெர்மனி ஆகிய அணிகள் இடம்பெற்ற “எஃப்” பிரிவில் இடம்பெற்றது. இதில் ஸ்வீடனுடன் 1-0, மெக்ஸிகோவுடன் 2-1 என தோல்வியடைந்தது.

கெத்தான வெற்றி :
இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியுடன் மோதியது. இதில் ஜெர்மனியை 2-0 என வீழ்த்தி சாதனை செய்தது.


வீரர்கள் மீது தாக்குதல் :
இந்நிலையில் லீக் போட்டியில் தோல்வியை தழுவி நாடு திரும்பிய தென் கொரியா வீரர்கள் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்க 500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.


இதில் சில ரசிகர்கள் வீரர்கள் மீது இருந்த அதிருப்தியை வெளிப்படுத்த அவர்கள் மீது முட்டையை எரிந்தனர், அதோடு மெத்தைகளை எரிந்து எதிர்ப்பை காட்டினர். அவர்களை போலீஸார் காட்டுப்படுத்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்